பேட்டரி தொழிற்சாலை அருகே பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் பயங்கர தீ...

பேட்டரி தொழிற்சாலை அருகே தீ விபத்து ஏற்பட்டதை ஒருமணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புத்துறையினர்

பேட்டரி தொழிற்சாலை அருகே பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் பயங்கர தீ...

கிருஷ்ணகிரி | சூளகிரியை அடுத்த குண்டுகுறுக்கி என்னும் கிராமத்தில் Luminous என்னும் பேட்டரி நிறுவனம், Nilkamal மற்றும் Toyota ஆகிய தொழிற்சாலைகள் அருகருகே அமைந்துள்ளது.

இந்நிலையில் லூமினேஷ் என்னும் பேட்டரி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை எதிரே பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேமிப்பு கிடங்குகள் திடிரென தீ பற்றி தீ  மள மளவென எரிய தொடங்கியது.

தீ அதிகமான நிலையில் அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கும் , சூளகிரி போலிசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க | உச்சநீதிமன்ற தீர்ப்பை தலை வணங்குவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் பேட்டி!

தகவலின் பேரின் ஓசூரில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.

1 மணிநேரமாக மள மள வென பற்றி எரிந்த தீயினால் அப்பகுதி முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்தது. மேலும் அருகருகே உள்ள தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தீ பற்றியதில்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் தீ பற்றி கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | பாதுகாப்பாக பட்டாசு எப்படி தயாரிப்பது என விழிப்புணர்வு பயிற்சி...