பாதுகாப்பாக பட்டாசு எப்படி தயாரிப்பது என விழிப்புணர்வு பயிற்சி...

தொடர் பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க பட்டாசு ஆலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வத்திராயிருப்பு தீயணைப்பு துறை சார்பாக விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

பாதுகாப்பாக பட்டாசு எப்படி தயாரிப்பது என விழிப்புணர்வு பயிற்சி...

விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளில் நேரடியாக 3 லட்சம்  தொழிலாளர்களும், மறைமுகமாக 3 லட்சம் தொழிலாளர்கள் என 6 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நெல் பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்களின் அஜாக்கிரதை காரணமாக பல்வேறு விபத்துக்கள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு மாவட்டம் முழுவதும் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | அறிமுக நாயகன் இஷான் நடிப்பில் ‘அரியவன்’... ட்ரைலர் வெளியீடு!!!

இதன் ஒரு பகுதியாக வத்திராயிருப்பு அருகே காடனேரி பகுதியில் உள்ள வடிவேல் பட்டாசு ஆலையில் பணிபுரியும் பட்டாசு தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்படாத வண்ணம் எப்படி பட்டாசு தயாரிக்க வேண்டும் என விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

அப்படி பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டால் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சியானது வத்திராயிருப்பு தீயணைப்பு துறை சார்பாக அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வை பேரணி