தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வை பேரணி

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வை பேரணி
Published on
Updated on
1 min read

ஆட்சிமொழிச் சட்ட நாளை நினைவுகூறல்
1956ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி இயற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்ட நாளை 
நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் கோவை  மாவட்டத்தில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது.

தமிழில் பெயர் வைக்க வேண்டும்

அதன் முதல் நாளான இன்று கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார். இதில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு தமிழில் கையொப்பம் இடுவோம், தமிழர் நாம் என்று கூறுவோம், தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பது போன்று தமிழ் ஆர்வத்தை ஊக்கபடுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தி பேரணி மேற்கொண்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கப்பட்ட இந்த பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நிறைவடைந்தது. 

முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இனிவரும் நாட்களில் 28ஆம் தேதி வரை கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com