இன்றுமுதல் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள்...

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இன்றுமுதல் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள்...

திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையேயான சிறப்பு ரயில் இன்று முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 3 நாட்களுக்கு இயக்கப்படுகிறது.

இதேபோல், மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை - சென்னை கடற்கரை இடையிலான சிறப்பு ரயில் டிசம்பர் 6 ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இதேபோல், தாம்பரம் – திருவண்ணாமலை இடையிலான சிறப்பு ரயில் நாளை மற்றும் நாளைமறுநாள் என 2 நாட்கள் இயக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இன்றுமுதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதன்படி, திண்டிவனம், புதுச்சேரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல், பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க | அய்யோ இனி கோயில்ல செல்ஃபி எடுக்க முடியாதா...நீதிமன்றம் உத்தரவு என்ன?!!!