முதலாவது வார்டிலேயே இத்தனை பிரச்சனையா? இதில் மோசமான சாலைகள் வேறு...

பொதுமக்கள் சுகாதாரத்துடன் விளையாடும் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு கூறி வருகின்றனர் அப்பகுதி மக்கள்.
முதலாவது வார்டிலேயே இத்தனை பிரச்சனையா? இதில் மோசமான சாலைகள் வேறு...
Published on
Updated on
1 min read

சிவகங்கை | சிங்கம்புணரி பேரூராட்சி 1 வது வார்டு சிங்கம்புணரி நகரி லேயே அதிகம் மக்கள் தொகை கொண்டதாகும். நெருக்கமான வீடுகளும் அதிக மக்களும் கொண்ட தேத்தாங்காட்டில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் லட்சக்கணக்கான கொசு புழுக்களும், கொசுக்களாலும் தினசரி இந்த பகுதிமக்கள் கொசு கடியால் அவதிபட்டு வருகின்றனர். இதனால் காய்சல் அரிப்பு போன்ற நோய்களால் அவதிபட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.

முக்கிய பிரதான சாலை கடந்த மாதம் போடப்பட்ட நிலையில் தெருகளின் பிரிவு  சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. சிமிண்ட்  சாலை போடப்பட்டு 15 வருடங்கள் ஆன நிலையில் பிரதான சாலை இணையும் இடத்தில் மேடும் பள்ளமாக உள்ளதால் இதன் வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள்,  இரு சக்கர வாகனம் ஓட்டிவரும் குடும்பத்தலைவிகள் கவிழுந்து விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது.

மேலும் கழிவு நீர் வாய்க்கால்கள் பராமரிப்பு இல்லாததால் இலட்சக்கணக்கான கொசு முட்டையிட்டு இரவு நேரங்களில் இந்த பகுதி மக்களின் இரத்தத்தை உரிஞ்சம் அவல நிலை தொடர்கிறது. ஆகவே சுகாதார துறையினரும் பேரூராட்சி நிர்வாகமும் ்உடனடியாக கவனிக்க வேண்டி கோரிக்கை எழுந்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com