நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்...

நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்...

ராணிப்பேட்டை | அரக்கோணம் திருத்தணி மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் சிலர் சாலையை ஆக்கிரமிப்பு செய்தும் சிலர் கடைகளின் முன்புறம் இரும்பு தகடுகளால் நீட்டித்தும் ஆக்கிரமித்துள்ளனர்கள். இதனால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி அடிக்கடி விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வரப்பெற்றது.

இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அரக்கோணம் கோட்ட உதவி செயற்பொறியாளர் உமாசெல்வன் தலைமையில் நெடுஞ்சாலை, நகராட்சி, மின்வாரியம், வருவாய், காவல் துறையினர் இணைந்து ஜேசிபி இயந்திரம் முலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்கள்.

அரக்கோணம் திருத்தணி சாலை, ஜோதி.நகர், சுவால்பேட்டை, காந்தி ரோடு 1முதல் 4வரை, பழிப்பேட்டை, மார்கெட் பகுதி, கிருஷ்ணாம்பேட்டை, சோளிங்கர் ரோடு, வரையிலான சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரையிலான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கி உள்ளன.

மேலும் படிக்க | வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு: முதலீட்டு வடிவில் தமிழ்நாட்டில் வருகிறது - தொல். திருமாவளவன்