செங்கோட்டையில் தீ விபத்து! கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி....

ப்ளாஸ்டிக் பொருட்கள் தீப்பற்றி எரிந்ததால், கரும்புகை சூழ்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
செங்கோட்டையில் தீ விபத்து! கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி....
Published on
Updated on
1 min read

தென்காசி: கடையநல்லூர் பகுதியில் உள்ள திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே சையது என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருட்களை தேக்கி வைக்கும் குடோன் ஒன்று உள்ளது.

இந்த குடோனில் உள்ள பழைய பிளாஸ்டிக் கழிவுகளில் இன்று காலை திடீரென தீப்பிடித்துள்ளது. தீயானது பிளாஸ்டிக் கழிவுகளில் மளமளவென பரவி அந்தப் பகுதி முழுவதும் கருப்பு புகை மண்டலங்களாக காட்சியளித்தன.

இதனால் பிளாஸ்டிக் குடோனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் ஏராளமான பொதுமக்களுக்கு கரும்புகை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்ட சூழலில், உடனே தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில், விரைந்து வந்த கடையநல்லூர் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி பிளாஸ்டிக் கழிவுகளில் பற்றிய தீயை முழுவதுமாக அனைத்தனர். இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com