பொன்னியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம்... திரளான பக்தர்கள் சாமி தரிசனம்...

பொன்னியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம்... திரளான பக்தர்கள் சாமி தரிசனம்...

திருவள்ளூர் | திருத்தணி அருகில் உள்ள பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், புராதான திருக்கோயிலான அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயிலில். ஜுர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா டிசம்பர்-2 அன்று நடைபெற்றது.

திருக்கோயில் வளாகத்தில் சகல தேவதா அனுக்ஞை, விக்னேஷ்வரர் பூஜை, புதிய சுவாமிகள் கரிகோலம் வருதல் மஹா சங்கல்பம், கணபதி, லஷ்மி, நவக்கிரக ஹாமம், கோபூஜை, பூர்ணாஹுதி,  மஹா தீபாராதனை அனைத்தும் நல்ல படியாக நடந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை, மஹா பூர்ணா ஹீதி, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு கோபுரம் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின், பொன்னியம்மனுக்கு சிறப்பு மஹா தீபாராதனை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருக்கோயில் சார்பில் 3000 - அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | கார்த்திகையில் விமர்சையாக நடந்த முருகன் கோவில் கும்பாபிஷேகம்...