வர்ற போற நெடுஞ்சாலைக்காக இப்போ இருக்கற சாலையை ஏன் எடுக்குறீங்க?

நடைபெறும் நெடுஞ்சாலை பணியால் வாகன ஓட்டிகள் அல்லல் பட்டு வருவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

வர்ற போற நெடுஞ்சாலைக்காக இப்போ இருக்கற சாலையை ஏன் எடுக்குறீங்க?

திண்டுக்கல் | ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரையிலான நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரை இடிக்கும் பணியில் தற்போது ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தடு.ப்புச்சுவரை இடிக்கும் ஊழியர்கள் சிமெண்ட் ஜல்லி கற்களை உடனடியாக அப்புறப்படுத்தாமல் சாலையிலேயே விட்டுவிட்டதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும்  கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க | நடை மேம்பாலம் திறக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு...

மேலும் இடிக்கப்பட்ட இடத்தில் தண்ணீர் ஊற்றாமல் இருப்பதால் சாலையில் மண் புகைமண்டலமாக மாறி வாகன ஓட்டிகளின் கண்களை பதம்பார்ப்பதோடு விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது.

எனவே இத்தனை பிரச்சனைகளை சந்திக்கும் வாகன ஓட்டிகளின் நிலைமையை கண்டுகொள்ளாமல் இருக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இடிக்கப்படும் இடிபாடுகளை அப்போது அப்புறப்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | சென்னையில் 28 நாட்களில் 3,499 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பறிமுதல்....