நடை மேம்பாலம் திறக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு...

உடுமலை பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட நடை மேம்பாலத்தை திறக்க கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நடை மேம்பாலம் திறக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு...

திருப்பூா் | கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் ஸ்டாண்ட் உள்ளது. கோவை பாலக்காடு பொள்ளாச்சி ஊட்டி திண்டுக்கல் மதுரை திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கு உடுமலை வழியாக பஸ்கள் செல்கின்றன.

தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் உடுமலை வருகின்றனர் பஸ் ஸ்டாண்ட் வெளியே பொள்ளாச்சி ரோடு செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் பயணியர் பொதுமக்கள் பொள்ளாச்சி ரோட்டை கடக்க முடியாமல் திணறினர்.

மேலும் படிக்க | பருவமழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பத அளவை...ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்...!

இதையடுத்து எக்ஷ உடுமலை நகராட்சி சார்பில் நடை மேம்பாலம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதனால் மக்கள் ரோட்டை கடக்க சிரமப்படுவது தொடர்கிறது.

அவசரமாக ரோட்டை கடக்கும் போது விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே நடை மேம்பாலத்தை உடனடியாக திறக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | பிரியாணியில் கிடந்த இரும்பு துண்டு.... அதிர்ச்சியான வாடிக்கையாளர்....