உடலை பத்திரமாக மீட்டுத் தரக் கோரி, கலெக்டருக்கு மீண்டும் மனு கொடுத்த குடும்பம்...

மலேசியாவில் ஓட்டல் வேலைக்கு சென்ற கணவரின் மரனத்தில் ச்சந்தேகம் ஏற்பட்ட நிலையில்,

உடலை பத்திரமாக மீட்டுத் தரக் கோரி, கலெக்டருக்கு மீண்டும் மனு கொடுத்த குடும்பம்...

தூத்துக்குடி | கயத்தாறு தாலுகா ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த சுடலைமாடனின் மகன் 47 வயதான அய்யாதுரை. இவருக்கும் இவரது மனைவி சொர்ணத்திற்கும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலைச் சார்ந்த தனியார் ஏஜென்சி மூலம் கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி கிராம பகுதியில் உள்ள ஒருவர் மலேசியா நாட்டில் கோலாலம்பூர் பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருபவரிடம் அய்யாதுரை வேலைக்குச் சென்றுள்ளார்.

மேலும் படிக்க | கணவர் மரணத்தில் சந்தேகம்... உடலை பத்திரமாக ஒப்படைக்க மனைவி கோரிக்கை...

இந்நிலையில் கடந்த 8ம் தேதி மதியம் 2 மணி அளவில் தனது மனைவி சொர்ணத்திடம் பேசி அய்யாதுரை இன்று சம்பளம் வாங்கி விடுவேன் வாங்கியவுடன் அனுப்பி விடுகிறேன் என வீடியோ கால் மூலம் தனது மனைவி மகளுடன் பேசியுள்ளார்.

இந்நிலையில் திடீரென இரவு ஹோட்டல் நடத்தி வரும் உரிமையாளரும் அவரது மனைவியும் அய்யாதுரை மனைவி சொர்ணத்திடம் உனது கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஆகவே அவரது உடலை நாங்கள் பத்திரமாக அனுப்பி வைக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | கண்ணில் மிளகாய் பொடி தூவி கள்ளக்காதலனுடன் கணவனை கொலை செய்த மனைவி...

தனது கணவர் தற்கொலை செய்து கொள்ளும் எந்த மனநிலையிலும் இல்லாத நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சொர்ணம் தனது மூத்த ஊனமுற்ற மகள் உள்ளிட்ட 3 மகள்கள் மற்றும் உறவினர்களுடன் தனது கணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் தனது குடும்பத்தினருக்கு அரசு உதவ வேண்டும் என அவர் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மாடியில் இருந்து விழுந்த ஏர் ஹோஸ்டெஸ்... கைதான காதலன்...