மாடியில் இருந்து விழுந்த ஏர் ஹோஸ்டெஸ்... கைதான காதலன்...

குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து விழுந்த விமான பணிப்பெண் அர்ச்சனா மரணத்தில் சந்தேகம் கொண்டு, அவரது காதலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாடியில் இருந்து விழுந்த ஏர் ஹோஸ்டெஸ்... கைதான காதலன்...

பெங்களூருவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் நான்காவது மாடி பால்கனியில் இருந்து விமானப் பணிப்பெண் ஒருவர் சனிக்கிழமை தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது காதலன் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தவர், 28 வயதான அர்ச்சனா. கடந்த மார்ச் 7ம் தேதி திமான் துபாயில் இருந்து பெங்களூரு வந்த 28 வயதான இவர், நகரின் பட்டுப் புறநகர்ப் பகுதியான கோரமங்களாவில் உள்ள ரேணுகா ரெசிடென்சி சொசைட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது காதலர் ஆதேஷ் என்பவருடன் தங்கியிருந்தார்.

மேலும் படிக்க | திருடப்பட்ட பைக்-கை ‘48’ மணி நேரத்தில் கண்டுபிடித்த சென்னை போக்குவரத்து போலீசார்!

டேட்டிங் தளத்தில் சந்தித்த சாஃப்ட்வேர் டெக்கீயான ஆதேஷ் மற்றும் அர்ச்சனா, கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அடிக்கடி இருவருக்கும் இடையில் சண்டைகள் வந்ததாக தகவல்கள் கூறும் நிலையில், சம்பவம் நடந்த அன்று, இருவரும் மது அருந்தியது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குடியிருப்பு அடுக்குமாடி கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில், காதலர் ஆதேஷ்-ஐ போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், அதேஷ், மது அருந்திய போதையால், பால்கனியில் இருந்து அர்ச்சனா தவறி விழுந்து விட்டார் என போலீசிடம் கூறியுள்ளார்.

அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் ஆதேஷ் போலீசாரிடம் தெரிவித்தார். பெண்ணின் மரணத்தில் ஆதேஷ் மீது சந்தேகத்தின் பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் நடவடிக்கை எடுக்க அர்ச்சனாவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்