தம்பி... அங்குட்டு வேணாம்... இங்குட்டு போவோம்...- ஜோடியாக சிக்கிய நகை திருடர்கள்...

போலி நகைகளுடன் தங்க நகைகடைகளில் உலாவந்த ஜோடி, நகையை மாற்றும் போது சுவாரசியமாக சிக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
தம்பி... அங்குட்டு வேணாம்... இங்குட்டு போவோம்...- ஜோடியாக சிக்கிய  நகை திருடர்கள்...
Published on
Updated on
1 min read

கடலூர் | திருப்பாப்புலியூர் சன்னதி தெருவில் உள்ள ஒரு ஜுவல்லரியில் இன்று ஒரு ஜோடி கணவன்-மனைவி போல் நகை வாங்க வந்தனர். மோதிரம் வாங்குவதாக கூறி வெகுநேரம் மோதிரம் உள்ள டிரேவை மாற்றி மாற்றி டிசைன் டிசைன் ஆக பார்த்து உள்ளனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் தாங்கள் கொண்டுவந்த மோதிரத்தை வைத்துவிட்டு கடையில் இருந்த மோதிரத்தை எடுத்து கைப்பையில் வைத்துவிட்டனர்.

இதனை கவனித்த கடை ஊரியர் இவர்களை கையும் களவுமாக பிடித்து சிறப்பாக கவனித்து அவர்கள் கைப்பையை சோதித்தால் அதில் ஒரு போலி தங்க நகை கடையே இருந்தது கண்டு இந்த ஜோடியை திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களை போலீசார் விசாரித்ததில் இவர்கள் சிதம்பரத்தை சேர்ந்த மேனகா (30) மற்றும் சீர்காழியை சேர்ந்த கௌதம் (30) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் நகை கடைக்கு செல்லும்போது போலி தங்க மோதிரம், ஜெயின், வலையல் போன்றவற்றை ஒரிஜினல் போல் பார் கோர்டு உடன் எடுத்துச்சென்று தங்க நகைகளுக்கு பதில் மாற்றுவதை தொழிலாக செய்துவந்துள்ளனர். இன்றும் கணவன் மனைவி போல் வந்து மோதிரம் வாங்க வந்ததாக சொல்லி நகைக்கடை ஊழியரிடம் மாடல் காண்பிக்க கேட்டுக்கொண்டதன் பேரில் 20 தங்கம் மோதிரங்கள் அடங்கிய Tray (தட்டு) எடுத்து காண்பித்தனர்.

அப்போது கடைக்கு வந்த இருவரின் ஒருவரான அந்த பெண் மாடல்  பார்ப்பது போல் ஒவ்வொரு மோதி ரமாக எடுத்து பார்ப்பது போல் பாவனை செய்து  கொண்டு தான் ஏற்கனவே எடுத்து வைத்து கவரிங் மோதிரத்தை  Tray வில் வைத்து விட்டு தங்க மோதிரத்தை எடுத்துச் செல்ல முயன்ற போது நகைக்கடை ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com