மூன்று பெண்கள் கிணற்றில் விழுந்து தற்கொலை...

மூன்று பெண்கள் கிணற்றில் விழுந்து தற்கொலை...

கடலூர் | மங்களூர் அடுத்த மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இவர் ஏற்கனவே திருமணம் செய்து அவர் மனைவி உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் இறந்துள்ளார்.

இந்நிலையில் சிவகுருநாதன்  சென்னையில் பணியாற்றும் போது சாந்தி என்ற பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதில் குழந்தையும் உள்ளது நிழல் கடந்த சில மாதங்களாக சிவகுருநாதன் சென்னையில் இருந்து சொந்த ஊரான மலையனூரில் வந்து தங்கி உள்ளார்.

மேலும் படிக்க | தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்...

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாந்தி அவரது மகள் அருள் மற்றும் அவரது அம்மா ஆகிய மூவரும் மலையனூருக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை கிராமத்தின் அருகில் உள்ள கிணற்றில் சாந்தி அவரது மகள் சிறுமி அருள் மற்றும் அவரது அம்மா ஆகியோரது உடல் மிதப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார் தீயணைப்பு துறை நிறை வரவழைத்து உடலை மீட்டு சிறுபாக்கம் போலீசார் மூவரும் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பெண் பயணிக்கும் பேருந்தின் நடத்துனருக்கும் இடையே மோதல் ...வைரலாகி வரும் வீடியோ..