தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்...

சென்னையில் சமூக செயப்பாட்டலாளர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்...

சென்னை | பெருங்குடி, கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகரில் உள்ள ஜான்சிராணி தெருவில் வசிப்பவர் சமூக செயற்பாட்டாளர் கணேசன். இவருக்கு வயது 52. இவர் பள்ளிகரனை சதுப்புநிலம் மற்றும் அரசு நிலம் உள்ளியிட்டவகளை சில ரவுடிகள் ஆக்கிறமைப்பு செய்வதகா கடந்த மாதம் 30ஆம் தேதி அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் புகார் அளித்து இருந்தார்.

அவரின் புகாரை அடுத்து அந்த ரவுடி கும்பல் அவர் வீட்டின் ஒரு பகுதியில் வாடகை விட்டு இருக்கும் கடையின் உரிமையாளர்களை வைத்து  அவரை தாக்கினர் அதன் பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் ஜே 9 துறைப்பக்கம் காவல் துறை அவரின் மீது வழக்கு பதிவு செய்வோம் என்று மிரட்டியதுமட்டும் இல்லாமல் அவதூறாக பேசி உள்ளார்கள்.

இதனை அடுத்து மனம் உடைந்த அவர் வீடியோவை வெளியிட்டு விஷம் அருந்தி கவலைக்கிடமாக நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ளார். அரசு நிலம் தொடர்பாக பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறை புகார் அளித்தவரையே மிரட்டுவது அதிகார அத்துமீறல்  ஊடங்கள் தான் இதனை தட்டிக்கேட்க வேண்டும்.

மேலும் படிக்க | பெண் பயணிக்கும் பேருந்தின் நடத்துனருக்கும் இடையே மோதல் ...வைரலாகி வரும் வீடியோ..