சாலையோர சிறு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி...

கொடைக்கானலில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் சாலையோர சிறு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டது.

சாலையோர சிறு வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி...

திண்டுக்கல் | கொடைக்கானல் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தோட்டக்கலை  துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி தலைமை வகித்தார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, நகர் மன்றத் துணைத்தலைவர் மாயக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | அழிவின் விளிம்பில் உள்ள மரங்கொத்தி பறவைகள்...! உணவு சங்கிலியை ஏற்படுத்த கோரிக்கை...!

மேலும், கொடைக்கானல் ஏரிசாலை, கலையரங்கம் பகுதி, அப்சர்வேட்டரி, பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 50 வண்டிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து காய்கறிகள் மற்றும் பழவகைகள் விற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க | தொடர்மழையால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்...