அழிவின் விளிம்பில் உள்ள மரங்கொத்தி பறவைகள்...! உணவு சங்கிலியை ஏற்படுத்த கோரிக்கை...!

அழிவின் விளிம்பில் உள்ள மரங்கொத்தி பறவைகள்...! உணவு சங்கிலியை ஏற்படுத்த கோரிக்கை...!

கொடைக்கானல் மலைப்பகுதியில் அழிந்து வரும் மரங்கொத்தி பறவைகள்..!
Published on

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே இருந்து வருகிறது. இங்கு அரிய வகை விலங்குகள் மற்றும் பறவை இனங்கள் வசித்து வருகிறது. தொடர்ந்து தற்போது மலைப்பகுதியில் அதிகமாக தென்பட்ட மரங்கொத்தி பறவைகள் தற்போது குறைவான அளவிலே இருந்து வருகிறது.

இந்த வகை பறவைகள் தற்போது அழிவின் விளிம்பில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். வனப்பகுதியில் உணவு சங்கிலி ஏற்படுத்தி அழிவின் விளிம்பில் உள்ள மரங்கொத்தி பறவைகளை மீட்டு எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com