பாரம்பரிய மீன்பிடி திருவிழா... திரளான மக்கள் பங்கேற்பு...

ஆவினிப்பட்டி ஆவினி கண்மாயில் 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடும்பத்துடன் பங்கேற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா.
பாரம்பரிய மீன்பிடி திருவிழா... திரளான மக்கள் பங்கேற்பு...
Published on
Updated on
1 min read

சிவகங்கை | திருப்பத்தூர் அருகே ஆவினிப்பட்டி கிராமத்தில் உள்ள ஆவினி கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த கண்மாய் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பகுதியில் விவசாயப் பணிகள் முடிவுற்ற நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் வற்றியதால் கிராமத்தார்கள் ஒன்றிணைந்து மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதனால்  கிராமத்தினர் இக்கண்மாயில் உள்ள நாட்டு மற்றும் வளர்ப்பு மீன்களை பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கு அறிவிப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதலே 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வருகை தந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் வருகை தந்த கிராம மக்கள் தாங்கள் தயராக வைத்திருந்த ஊத்தா, கச்சா, கொசுவலை, அரிவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்பிடிக்க அனுமதி கிடைத்தது.

பின், போருக்கு போகும்  போர்வீரர்களை போல மின்னல் வேகத்தில் ஊத்தா கூடையுடன் ஒடி சென்று போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் விரா, கெழுத்தி, கட்லா, கெண்டை என மீன்களை பிடித்து மகிழ்ச்சியோடு சென்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com