மதுரையில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா... பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு...

சூரத்தூர்பட்டியில் உள்ள பெரிய கண்மாயில்  சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

மதுரையில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா... பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு...

மதுரை | மேலூர் அருகே சூரத்தூர் பட்டியில் உள்ள பெரிய கண்மாயில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தாங்கள் கொண்டு வந்திருந்த ஊத்தா கச்சா வலை உள்ளிட்ட வகைகளை கொண்டு, கெண்டை, ரோகு, குறவை, நண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை போட்டி போட்டு பிடித்து மகிழ்ந்தனர்.

மேலும் படிக்க | இலங்கையில் இருந்து நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேர் விடுதலை...!!!

விவசாயம் செழிக்கவும், கிராம மக்கள் நலமுடன் வாழ வேண்டி நடைபெறும் இந்த மீன்பிடித் திருவிழாவில், கலந்துகொண்டு பிடிபடும் மீன்களை எவ்வளவு விலை கொடுத்தாலும் அதை விற்பனை செய்யாமல் வீட்டிற்கு கொண்டு சென்று சாமி படத்திற்கு முன்பாக வைத்து வழிபாடு நடத்தி  பின்னரே சமைத்து உன்பது மேலூர் பகுதியின் வழக்கமாக உள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு...