பிரம்மபுரிஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்...

கும்பகோணத்தில் அமைந்துள்ள பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிரம்மபுரிஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்...
Published on
Updated on
2 min read

தஞ்சாவூர் | கும்பகோணத்தில் மேலக்காவேரியில் அமைந்துள்ள பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான சிவஸ்தலமாகும்.

மகா பிரளயத்திற்கு பின் உலகை சிருஷ்டிக்க, பிர்மா ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததுடன், அதன் அருகில் ஒரு தீர்த்தத்தையும் ஏற்படுத்தி வழிபட்டார். அதுவே பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பிர்ம்ம தீர்த்தமும் ஆகும்.

இங்கு வந்து வணங்குவோரின் தலைவிதியை மாற்றி அமைக்கும் சக்தி உள்ளவர்களாக, இத்திருக்கோயிலில் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி பிர்மாவும், வடக்கு நோக்கி, ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளும் அருள்பாலிக்கின்றனர்.

மேலும் சத்ரு நிவர்த்தி மங்கள பிரத்தியங்கிராதேவி தெற்கு நோக்கி தனி சன்னதியில் இங்கு  அருள்பாலிக்கிறார் இவருக்கு மாதம் தோறும் அமாவாசை தினத்தில் மாலை நிகும்பலா யாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இத்தகைய பெருமைமிகு திருத்தலத்திற்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த 2016ம் ஆண்டு தை மாதம் இந்த திருக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில், இத்திருக்கோயிலின் 7ம் ஆண்டு, ஸம்வஸ்ராபிஷேக திருக்கல்யாண உற்சவத்தினை முன்னிட்டு, இன்றிரவு அனைத்து சுவாமிகளுக்கு விசேஷ சந்தனகாப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக, நந்தி வாத்தியங்கள் முழங்க, பழங்கள், மங்கல பொருட்கள், என சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்து சமர்பித்தல் நிகழ்வும், சுவாமியும் தாயாரும், மாலை மாற்றும் வைபவமும், தொடர்ந்து ஊஞ்சல் மற்றும் நலுங்கு உற்சவமும் நடந்தது.

பின்னர் சிவாச்சாரியார்கள் விசேஷ யாகம் வளர்த்து வேத மந்திரங்கள் ஜபிக்க, திருக்கல்யாண உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக மங்கல்ய தாராணமும் வெகு சிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி  தரிசனம் செய்தனர் திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னப்பிரசாதங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com