குற்றால அருவியிலே.. குளிச்சது போல ஏதுமில்லை... தடை விலகி குளிக்க அனுமதி...

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பழைய குற்றால அருவியில் 4வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது.

குற்றால அருவியிலே.. குளிச்சது போல ஏதுமில்லை... தடை விலகி குளிக்க அனுமதி...

தென்காசி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலமான குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கழை மழையால் குற்றாலம் அருவிகளில்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

மேலும் படிக்க | குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை...

குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தது. இதனால் நேற்று கார்த்திகை சோமவார சிறப்பு வழிபாட்டிற்காக நீராட முடியாமல் சுமங்கலிப் பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தற்போது குற்றாலம் மெயின் அருவியில் நீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய குற்றால அருளியில் வெள்ளப் பெருக்கு தொடர்வதால் இன்று 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கார்த்திகை 2-வது சோமவாரத்தில் புனித நீராடிய சுமங்கலிகள்...