கார்த்திகை 2-வது சோமவாரத்தில் புனித நீராடிய சுமங்கலிகள்...

குற்றால அருவியில் கார்த்திகை 2வது சோமா வாரத்தை முன்னிட்டு சுமங்கலி பெண்கள் அதிகாலையில் புனித நீராடினர்.

கார்த்திகை 2-வது சோமவாரத்தில் புனித நீராடிய சுமங்கலிகள்...

தென்காசி | ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் கார்த்திகை சோமா வரம் சுமங்கலிப் பெண்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது விரதம் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டியும், குடும்பம் வளம் பெற வேண்டியும் புனித நீராடி கோவில்களில் வழிபாடு செய்வார்கள்.

கார்த்திகை மாத 2வது திங்கட்கிழமையான இன்று அதிகாலை 2 மணியில் இருந்து தென்காசி மாவட்டத்தின் புனிதஸ்தலமான குற்றால மெயின் அருவியில் புனித நீராடுவதற்காக பல ஆயிரக்கணக்கான பெண்கள் குற்றாலத்திற்கு வருகை தந்தனர்.இதனால் குற்றால அருவியில் அதிகாலை 2 மணி முதல் பெண்கள் மட்டுமே குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க | களைகட்டிய அண்ணாமலையார் திருக்கோயில்...தொடங்கியது கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்... !

குற்றால அருவியில் புனித நீராடிய பெண்கள் அருவிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு திருக்குற்றால நாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்ததுடன், கோவில் அருகில் உள்ள செண்பக விநாயகருக்கு அருகன் புல்மாலை அணிவித்ததுடன், கோவிலின் பிரகாரத்தில் உள்ள ராகுபகவானான நாகர் சிலைகளுக்கு பால், மஞ்சள்பொடி, பழம் வைத்து சூடன் ஏற்றி சிறப்பு வழிபாடுகளை செய்து கார்த்திகை சோமா வாரத்தை பெண்கள் கொண்டாடினர்.

இந்த மாதத்தில் வரக்கூடிய 4 கார்த்திகை திங்கட்கிழமைகளிலும் சோமா வரத்தை சுமங்கலி பெண்கள் கொண்டாடுவார்கள். கார்த்திகை 2வது சோமா வாரத்தை முன்னிட்டு குற்றால அருவிக்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு  இருந்தாலும், போதிய அளவு பெண் போலீசார் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்படாததால் புனித நீராட வந்த சுமங்கலி பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

மேலும் படிக்க | கச்சபேஸ்வரர் கோயிலில் கடை ஞாயிறு திருவிழா... நேர்த்திக்கடன் செய்து ஏராளமான பக்தர்கள் தரிசனம்...