மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி...! மோட்டார் இயங்காததால் ஏற்பட்ட சோகம்...!

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி...! மோட்டார் இயங்காததால் ஏற்பட்ட சோகம்...!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சாலைப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரது மனைவி காஞ்சனா இவர் மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ரமேஷ் (15) என்ற மகனும், சந்தோஷி (13) என்ற மகளும் உள்ளனர். ரமேஷ் மகிபாலன்பட்டி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்நிலையில் இன்று காலையில் பள்ளிக்கு கிளம்பும் போது வீட்டில் உள்ள மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அது இயங்காததால் அருகில் இருந்த கம்பியை எடுத்து மோட்டார் மின்விசிறியை இயக்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரமேஷின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்பு ரமேஷ் மயங்கி இருந்ததை கண்டு அதிர்ந்து போன அவரின் உறவினர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரமேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.  

இந்நிலையில் பள்ளி மாணவன் இறந்தது சாலப்பட்டி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிக்க : புதுச்சேரி : புதிய வாக்காளர்களை சேர்க்க புதிய செயலி...! விழிப்புணர்வு முகாம்...!