கழுதைப் பால் விற்பனை அமோகம் ...

தென்காசி மாவட்டத்தில் கழுதைப் பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
கழுதைப் பால் விற்பனை அமோகம் ...
Published on
Updated on
2 min read

தென்காசி | சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சுதம் இவர் சலவைத் தொழில் செய்து வருகிறார். சலவைத் தொழிலில் பொதி சுமக்கும் பணியில் ஈடுபடுத்துவதற்காக கழுதைகளை வளர்த்து வந்துள்ளார். காலம் காலமாக இவருடைய முன்னோர்கள் கழுதைப் பால் விற்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது இவரும் கழுதை பால் விற்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். கழுதை பாலின் நன்மை அறிந்து தினந்தோறும் இவரை நாடி அதிகமானோர் கழுதை பால் கேட்டு வரத் தொடங்கினர்.

கழுதை பால் என்பது கிடைப்பது அபூர்வம் என்று கருதப்படும் நிலையில் கழுதை பால் குறித்து  அஞ்சுகம் கூறுகையில், “கழுதை பால் குழந்தைகளுக்கு கொடுப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; மஞ்சள் காமாலை நோய் தாக்காது; சளித்தொல்லை அகலும்; சீர் தட்டும் குழந்தைகளுக்கு உடனடி மருந்தாக செயல் படுகிறது. உடல் இளைத்த குழந்தைக்கு உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது” என அவர் கூறினார்.

மேலும், கழுதை பால் எங்கு கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்து வந்ததால் தானே  மக்களைத் தேடி சென்று கையில் இருக்கும் ஒலிபெருக்கியில் அறிவித்தபடி கழுதை பால் விற்கும் பணியை துவங்கியதாகவும் குழந்தைகளுக்கு அருமருந்தாக செயல்படும் கழுதை பாலை 1 சங்கு பால் 60 ரூபாய்க்கு விற்பதாகவும் கூறினார்.

இதன் நன்மை தெரிந்த பெரும்பாலான பெண்கள் தனது வாடிக்கையாளர்களாக இருபதாகவும் தற்போது கழுதை இணங்கள் சிறிது சிறிதாக அழிந்து வருவதாகவும் வருங்காலங்களில் அரிதிலும் அரிதாக கழுதை பால் மாறிவிடும் என வேதனை தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com