பனியால் கருகும் ரோஜா மலர்கள்... ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்...

கொடைக்கானல் ரோஜா பூங்காவில் மலர்கள் கருகி வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பனியால் கருகும் ரோஜா மலர்கள்... ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்...
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் | கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக புதிதாக திறக்கப்பட்ட  ரோஜா பூங்கா உள்ளது. தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோஜா பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் இருந்து வந்தது.

தற்போது பனி தாக்கத்தாலும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் ரோஜா பூங்காவில் மலர்கள் இன்றி காணப்படுகிறது, சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் மலர்கள் இன்றி காய்ந்த செடிகளை கண்டு  பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் முறையான பராமரிப்பு இன்றி இருப்பதால் பனியின் தாக்கத்தின் காரணமாக ரோஜா செடிகள் அனைத்தும் கருகி இருக்கிறது என நுழைவாயிலில் தெரிவித்திருந்தால் எங்களது நேரம், ஆற்றும் பணம் விரயம் ஆகாமல் மற்ற இடங்களுக்கு சென்று இருப்போம் என சுற்றுலா பயணிகள் தங்களது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

மேலும் நுழைவு கட்டணம் வாங்கி மலர்கள் இன்றி இருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் இப்பகுதியில் அமைக்கப்பட்ட  சிசிடிவி இல்லாததால் குற்றங்கள் நடைபெறுவதற்கு வசதியாக பூங்கா அமைந்துள்ளது.

மேலும் பனி பொழிவு அதிகமான நேரங்களில்  மலர் செடிகளை பசுமை போர்வைகளை கொண்டு மூடி பனியின் தாக்கத்தால் மலர் செடிகள் பாதிப்படையாமல் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் எனவும் இது போன்ற சமயங்களில் நுழைவு கட்டணம் குறைத்தால் நன்றாக இருக்கும் எனவும் சுற்றுலாப் பயணிகள் தமிழக அரசுக்கு  கோரிக்கையும் விடுத்துள்ளனர் .

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com