கொடைக்கானலில் பூத்து குலுங்கிய குறிஞ்சி பூக்கள்...

கொடைக்கானல் ஏரி சாலை அருகே தனியார் விடுதியில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது.

கொடைக்கானலில் பூத்து குலுங்கிய குறிஞ்சி பூக்கள்...

திண்டுக்கல் | கொடைக்கானல் மலைப்பகுதிகள் பல்வேறு வகையிலான பூக்கள் பூத்து குலுங்கும் . இங்கு கால நிலைக்கு ஏற்ப பல வகையிலான பூக்கள் பூக்கும் . இதனைக் காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகள் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

மேலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்தும் வருவர் . இந்த நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் முழுவதிலும் கடந்த 2018 ஆம் ஆண்டு 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்கியது.

இதனைத் தொடர்ந்து ஏரிச்சாலை பகுதியில் தனியார் விடுதியில் தற்போது 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் பிரம்மாண்டமாக பூத்துக் குலுங்கி வருகிறது. இந்த குறிஞ்சி பூக்களில்  தேனீ வட்டமிடுவது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இதனை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் .இந்த விடுதியில் அடுத்து 2034 ஆம் ஆண்டு குறிஞ்சி பூக்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர் .

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் பனிப்பொழ்வு..! பனிபோர்வை போர்த்தியது போல காட்சியளித்த கொடைக்கானலின் ரம்மியமான காட்சி