சாதி வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட தூய்மை பணியாளர்...

சாதிய வன்கொடுமையால் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட தூய்மைப்பணியாளரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
சாதி வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட தூய்மை பணியாளர்...
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி | திருச்செந்தூர் அருகில் உள்ள உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்க்க வந்த சுடலை மாடனை பேரூராட்சி தலைவரின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஆயிஷா கல்லாசி சாதியைச் சொல்லி இழிவாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்து தூய்மை பணியாளர் கடந்த 14-ம் தேதி பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தார். இதனையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சுடலை மாடனை சாதியைச் சொல்லி இழிவாக பேசிய பேரூராட்சி தலைவரின் மாமியார் ஆயிஷா கல்லாசி மற்றும் செயல் அலுவலர் பாபு மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இருவரையும் கைது செய்யக்கோரி திருச்செந்தூர், உடன்குடி, நாசரேத், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மைப்பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பேரூராட்சி தலைவரின் மாமியார் ஆயிஷா கல்லாசி மற்றும் செயல் அலுவலர் பாபு இருவரையும் கைது செய்யக்கோரியும் பேரூராட்சி தலைவர் ஹீமைரா ரமீஷ் பாத்திமா மீது நடவடிக்கை எடுக்ககோரியும் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் உடன்குடி பேரூராட்சி அலுவலகம் அருகில் சுடலைமாடனின் உடலை வாங்க மறுத்து  கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

மேலும் படிக்க | ’கனத்த இயத்துடன் நிற்கிறேன்’ ஆன்லைன் தடை சட்டத்தை மீண்டும் தாக்கல் செய்தார் முதலமைச்சர்!

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com