’கனத்த இயத்துடன் நிற்கிறேன்’ ஆன்லைன் தடை சட்டத்தை மீண்டும் தாக்கல் செய்தார் முதலமைச்சர்!

’கனத்த இயத்துடன் நிற்கிறேன்’ ஆன்லைன் தடை சட்டத்தை மீண்டும் தாக்கல் செய்தார் முதலமைச்சர்!

Published on

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2-வது முறையாக, மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. 


ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பிய நிலையில், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தில்,  ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று இரண்டாவது முறையாக மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

சட்ட மசோதாவை தாக்கல் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனத்த இயத்துடன் இந்த மாமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்று தனது உரையைத் தொடங்கினார். தனது தற்கொலையே கடைசி தற்கொலையாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட வினோத்குமாரின் கடிதத்தை குறிப்பிட்ட முதலமைச்சர், இந்த சட்டத்தை உருவாக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று கூறினார்.

மேலும் இந்த சட்டம் அறிவால் மட்டுமல்ல இதயத்தால் உருவான சட்டம் என்று உருக்கத்துடன் கூறியவர், இந்த சட்ட மசோதாவை அவை உறுப்பினர்கள் அனைவரும், ஏக மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com