சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்...

ஊதியூர் மலை பகுதியில் சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலியாகியுள்ளது. இதனால் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்...

திருப்பூர் | காங்கேயம் அருகே உள்ளது ஊதியூர். இங்கு உள்ள காப்பு காட்டில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்று அதிகாலை ஊதியூரில் தோட்டத்தில் இருந்த மாட்டுக்கன்றை அடித்து கொன்றது.

இதனால் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உடனடியாக சிறுத்தை பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஊதியூரில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இது கிட்டத்தட்ட 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த மலைப்பகுதியைச்  சுற்றிலும் கடந்த வாரத்தில் செம்மறியாடு மற்றும் ஒரு விவசாயினுடைய மாட்டுக்கன்று என இரண்டு கால்நடைகளை  மர்ம விலங்கு அடித்து கொன்றது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அறிவித்தனர்.

மேலும் படிக்க | காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானையால் பதற்றம்...

இந்நிலையில் இன்று அதிகாலை ஊதியூர் அருகே உள்ள  சாமிநாதன் என்பவர் தோட்டத்தில் இருந்த மாட்டுக்கன்றை அடித்து சிறிது தூரம் இழுத்துச் சென்று போட்டுவிட்டு வனப் பகுதிக்குள் தப்பி சென்றதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி என்ற பெண்மணி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது ஊதியூர் அருகே இருந்த மரத்தின் மீது படுத்திருந்த சிறுத்தை எட்டி குதித்து வனப்பகுதிக்குள் சென்றதை நேரில் பார்த்துள்ளார்.

மேலும் படிக்க | அப்பாடா ஒரு வழியா வந்தாச்சு!- மகிழ்ச்சியில் மக்னா...

இதை அடுத்து இன்று ஊதியூர் வனப்பகுதிக்கு வந்த வனச்சரக அலுவலர் தனபால் அப்பகுதி பொதுமக்களிடம் பாதுகாப்பாக இருக்கும் படியும் சிறுத்தை பிடிப்பதற்கான கூண்டு தயார் செய்துள்ளதாகவும் இன்று மாலை கூண்டு கொண்டு வந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உடனடியாக சிறுத்தையை பிடிக்க அனைத்து விதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதுவரையிலும் ஊதியூர்  பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம் என்றும் குழந்தைகளையும் கால்நடைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கும்படியும்  கேட்டுக்கொண்டார். இதை அடுத்து அப்பகுதி மக்கள் கடும் அச்சத்துடன் உள்ளனர்.

மேலும் படிக்க | திடீரென பரவிய காட்டுத் தீயால் அரிய வகை மரங்கள் எரிந்து சேதம்...