அப்பாடா ஒரு வழியா வந்தாச்சு!- மகிழ்ச்சியில் மக்னா...

கோவையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை வால்பாறை வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
அப்பாடா ஒரு வழியா வந்தாச்சு!- மகிழ்ச்சியில் மக்னா...
Published on
Updated on
2 min read

கோவை | யானைகள் என்றாலே பலருக்கு அலாதி ப்ரியம். அதுவே மதம் பிடித்தால் என்னவாகும் என்று அனைவருக்கும் தெரியும். அப்படிபட்ட அச்சத்தை கோவை மக்களுக்கு கொடுத்து வந்தது வழி தவறி வந்த  மக்னா யானை. அதனை பிடிக்க வனத்துறையினர் பெரும் போராட்டமே நடத்தினர்.

கோவை மாநகரப் பகுதிகளான  குனியமுத்தூர், செந்தமிழ் நகர், அறிவொளி நகர், பி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளை வலம் வந்த மக்னா யானை பொதுமக்களுக்கு தண்ணிகாட்டியது என்றே சொல்லலாம். இந்நிலையில்  குரும்பபாளையம் பகுதியில் எதிரே வந்த ஒருவரை யானை தும்பிக்கையில் தள்ளி விட்டு சென்றது.

இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், யானை பி.கே.புதூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது.

பின்னர் நொய்யல் ஆற்றுக்கு அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் மக்னா யானை நின்று கொண்டிருந்தது. இந்த யானையை பிடிக்க டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற வரவழைக்கப்பட்டது.

இதையடுத்து  மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணிகளை வனத்துறையினர் துவக்கினர். ஒரிரு முறை மருத்துவர்கள் செலுத்திய மயக்க ஊசி குறி தவறி சென்றது. முட்புதர் பகுதியில் சுற்றிய மக்னா யானை வாழைத்தோட்டத்திற்குள் சென்றது.

அப்போது மருத்துவர் பிரகாஷ் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தினார். இதையடுத்து ஆக்சனுக்கு பெயர் போன கும்கி சின்னதம்பியை டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து வனத்துறையினர் கொண்டு வந்தனர். கொஞ்சம் போக்கு காட்டிய பின் மக்னா  சின்னதம்பியிடம் மட்டையாகவே மடங்கியது. இதையடுத்து அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட மக்னா யானை

வால்பாறை அருகே மானாம்பள்ளி வனப்பகுதியின் மந்திரி மட்டம் என்ற இடத்தில் வனத்துறையினர் விடுவித்தனர். வனப்பகுதியில் நீர்நிலைகளின் பயன்பாடு குறைவாக இருப்பதால் இதுபோன்ற யானை நடமாட்டம் குடியிருப்பு பகுதிகளில்  காணப்படுகிறது. இதனை சரிசெய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் பிரதான கருத்தாக உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com