மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை ...

மணல் குவாரி அமைக்கும் முடிவினை கை விடக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை ...

தூத்துக்குடி | விளாத்திகுளம் அருகே ஆற்றாங்கரை ஊராட்சிக்குட்பட்ட கிராமம் அம்மன்கோவில்பட்டி. இந்த ஊரில் 15 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுடைய பிரதான தொழில் விவசாயம் தான். வைப்பாற்றின் கரையோரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் ஒரு காலத்தில் விவசாயம் செழிப்பாக இருந்தது.

மேலும் படிக்க | தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் மீண்டும் கன்டிசன் போடும் உயர்நீதிமன்றம்

ஆனால் தற்பொழுது வறட்சி காரணமாக விவசாயம் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. குடிதண்ணீர் கூட ரூ.15 விலை கொடுத்து தான் வாங்கும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் அம்மன்கோவில்பட்டி பகுதியில் மணல்குவாரி அமைக்க அரசு சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே போதிய மழை இல்லை, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு இருப்பதால் மணல் குவாரி அமைந்தால் முற்றிலுமாக தங்களுடைய விவசாயம் பாதிக்கப்பட்டு வாழ்வாதரம் இழந்து ஊரை காலி செய்யும் நிலை ஏற்பட்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | நாட்டின் மதிப்புக்குரிய அமைப்புகள் ஒருதலைப்போக்காக செயல்படுகிறது - முதலமைச்சர் கண்டனம்

இதனால் தங்கள் கிராமம் மட்டுமல்ல தங்கள் ஊராட்சி பகுதியில் எங்கும் மணல் குவாரி அமைக்க கூடாது என்று வலியுறுத்தி அம்மன்கோவில்பட்டி கிராமத்தினை சேர்ந்த மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல்குவாரி அமைக்கும் திட்டத்தினை கைவிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு பின்பற்றாத செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை