டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு பின்பற்றாத செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு பின்பற்றாத செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

1 முதல் 12 ஆம் வகுப்பு,  அல்லது  டிஎன்பிஎஸ்சி தேர்வில் கோரப்பட்டுள்ள தகுதி முழு கல்வியையும் தமிழ் மொழியில் பயின்றவர்கள் மட்டுமே TNPSC-யில் தமிழ் வழியில் பயின்றதற்கான 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை முழுமையாக பின்பற்றாத டி என் பி எஸ் சி செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க  கோரி வழக்கு.

நீதிபதிகள் கேள்வி ?

இரண்டு ஆண்டுகள் ஆங்கில வழி கல்வி பயின்றவருக்கு தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழங்கியது எப்படி யார் சான்றிதழ்கள் வழங்கினர்-  நீதிபதிகள் கேள்வி.?

வழக்கு தொடர்பாக இதுவரை எந்தெந்த ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை வசம் வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்களுடன் காமராஜர் பல்கலைக்கழகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

வழக்கு விசாரணை குறித்து  லஞ்ச ஒழிப்புத் துறையினர் தரப்பில்  விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரையைச் சேர்ந்த சக்தி ராவ்  என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

தமிழ்வழியில் கல்வி சலுகை

அதில்" தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தமிழ் வழி இட ஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தேன் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்  1 முதல் 10 ஆம் வகுப்பு, 11,12ஆம் வகுப்பு, கல்வி அல்லது  கோரப்பட்டுள்ள தகுதி போன்ற முழு கல்வியையும் தமிழ் மொழியில் பயின்றவர்கள் மட்டுமே TNPSC-யில் தமிழ் வழியில் பயின்றதற்கான 20% இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். அவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20% வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயின்றவருக்கான போலி சான்றிதழ் வழங்கப்பட்டத" என்பதை ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தில் 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது இந்த உத்தரவை பின்பற்றாத டி என் பி எஸ் சி செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் புகழேந்தி அமரவும் முன்பாக விசாரணைக்கு வந்தது 

தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழங்கியது எப்படி ?

லஞ்ச ஒழிப்புத் துறையினர் தரப்பில் ஒரு மாணவர்க்கு  இரண்டு ஆண்டுகள் ஆங்கில வழியில் பயின்று மூன்றாவது ஆண்டு தமிழ் வழியில் பயின்றவருக்கு தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் இரண்டு ஆண்டு ஆங்கில வழியில் பயின்றவருக்கு தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழங்கியது எப்படி யார் அவருக்கு தமிழ் வழி கல்வி சான்றிதழ் வழங்கியது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

 மேலும் படிக்க | ஐ. ஐ .டி. மரணங்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தாதே காரணம் - குற்றம் சாட்டும் நிரூபன்

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தரப்பில் இதுவரை எந்தெந்த ஆவணங்கள் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது என்ற விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் இதே போல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தரப்பில் எந்தெந்த ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது மேலும் என்னென்ன ஆவணங்கள் விசாரணைக்கு தேவைப்படுகிறது மேலும் விசாரணை தற்போது நிலை என்ன உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.