மீண்டும் உலா வந்த படையப்பா யானை... மக்கள் அதிர்ச்சி...

கேரள மாநிலம் மூணாறு அருகே படையப்பா என்ற காட்டு யானை உலா வந்த காட்சி வெளியாகியுள்ளது.

மீண்டும் உலா வந்த படையப்பா யானை... மக்கள் அதிர்ச்சி...

கேரளா | இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் கடந்த சில மாதங்களாக படையப்பா  என்னும்  காட்டு யானை தொடர்ந்து உலா வந்து அங்கு உள்ள கடைகளில் பொருட்களை உடைத்து சேதப்படுத்துவதும் தெருக்கள் மற்றும் சாலையில் புகுந்து அங்கு உள்ள பொருட்களை சேதப்படுத்தி வந்தது.

கடந்த ஒரு வாரமாக இந்த காட்டு யானைகளின் அட்டகாசம் குறைந்திருந்த நிலையில் நேற்று இரவு படையப்பா என்னும் காட்டு யானை மூணாறு அருகே உள்ள நாயமங்காடு என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென உலா வந்தது.

மேலும் படிக்க | மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட காட்டு யானை...

இதன் காரணமாக இந்தப் பகுதியில் சென்ற வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட நிலையில் யானை ஒவ்வொரு வாகனத்தில் அருகில் வந்து தும்பிக்கையால் காரின் கண்ணாடி அருகே ஆசீர்வதிப்பது போலநின்று கொண்டிருந்தது

சுமார் ஒரு மணி நேரம் சாலையில் உலா வந்த யானைகளினால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர். ஒரு மணி நேரம் சாலையில் இருந்தபோதிலும் படையப்பா  யானையினால் யாருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. பின்னர் யானை அந்த பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

மேலும் படிக்க | சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்...