தொடங்கியது நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் தேர்தல்...!

தொடங்கியது நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் தேர்தல்...!

62 ஆயிரத்து 169 பேர் வாக்களிக்கக் கூடிய நாடார் மகாஜன சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் இன்று மதுரையில் தொடங்கியுள்ளது.

நாடார் மகாஜன சங்கம், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மற்றும் பாலிடெக்னிக் ஆகிய மூன்று அமைப்புகளின் நிர்வாகிகள் தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மதுரை நாகமலை, புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடைபெறுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி 
நீதிபதி கிருபாகரன் மேற்பார்வையில் இந்த தேர்தலானது நடைபெறுகிறது. 
நாடார் மகாஜன சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் மூன்று துணைச் செயலாளர்களுக்கு ஒரு வாக்குச்சீட்டும்; நாடார் மகாஜன சங்கத்தின் மண்டல செயலாளர் 63 பேருக்கு ஒரு வாக்குச்சீட்டும்; வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தலைவர், செயலாளர், பொருளாளர் துணைத் தலைவர், துணைச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து நிர்வாகிகளுக்கு ஒரு வாக்குச்சீட்டும்; 40 கமிட்டி மெம்பர்களுக்கு ஒரு வாக்குச் சீட்டும், அதே போல் பாலிடெக்னிக்கிற்கு தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், துணைச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஐந்து பேருக்கு ஒரு வாக்குச்சீட்டும்; கமிட்டி மெம்பர்கள் 40 பேருக்கு ஒரு வாக்குச் சீட்டும் ஆக மொத்தம் ஏழு வாக்குச்சீட்டுகள் ஒவ்வொரு வாக்காளருக்கும் கொடுக்கபட்டுள்ளது. தேர்தலானது வாக்குச்சீட்டு முறையிலேயே நடைபெறுகிறது 

மொத்தம் 62,169 வாக்காளர்கள் நாடார் மகாஜன சங்க தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவானது 5 மணிக்கு மேல், பதிவான வாக்குகளை எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தல் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி நீதிபதி கிருபாகரன் மேற்பார்வையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : தீவிர பிரச்சாரத்தில் களமிறங்க தொடங்கவுள்ள பிரதமர் மோடி...!