தீவிர பிரச்சாரத்தில் களமிறங்க தொடங்கவுள்ள பிரதமர் மோடி...!

தீவிர பிரச்சாரத்தில் களமிறங்க தொடங்கவுள்ள பிரதமர் மோடி...!
Published on
Updated on
1 min read

குஜராத் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். 

நவம்பர் 3 ஆம் தேதி அன்று குஜராத் சட்டமன்ற தேர்தலின் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.  அந்த வகையில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வாக்கு எண்ணிக்கை  8ம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது குஜராத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மணிலா சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 18, 2023 அன்று முடிவடைவைத்து குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், வல்சாத் மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி தனது சொந்த மாநிலத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com