விமர்சையாக நடைபெற்ற ‘குட்டி குடி’ திருவிழா...

ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் குட்டி குடி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விமர்சையாக நடைபெற்ற ‘குட்டி குடி’ திருவிழா...

திருச்சி | மண்ணச்சநல்லூர் செங்குந்தர் வகையறா ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழாவானது கடந்த 17ம் தேதி முகூர்த்தக்கால் நிகழ்வுடன் தொடங்கியது.

தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் கரகம் பாலித்து தீர்த்த குடத்துடன் வருதல் நிகழ்வும் நடைபெற்றது.

மேலும் படிக்க | தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்ற கும்பாபிஷேக விழா...பக்தர்கள் மீது தெளிக்கப்பட்ட புனித நீர்!

இன்று ஸ்ரீ பகவதி அம்மன் மலர் அலங்காரத்தோடு சிறப்பு பூஜைகளுடன் தீபாரதனையும், நித்யபடி அபிஷேகம், கூழ் அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து கருப்பு கோயிலிருந்து மருளாளி அருளுடன் வந்த பின் பக்தி பரவசத்துடன் மருளாளி குட்டி குடித்தல் நிகழ்வு நடைபெற்றது.

ஆடு, கோழிகளை குட்டி குடித்த போது பக்தர்களை பரவசமடைய செய்தது. தொடர்ந்து மஹா தீபாரதனை நடைபெற்றது. இந்த குட்டி குடித்தல் திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்க | அருணாசலேஸ்வரர் கோயில் குவிந்த பக்தர்கள் கூட்டம்...