மதுக்கடைகள் அடைக்கப்பட வேண்டும்... - 300க்கும் மேற்பட்டோர் சாலை போராட்டம்...

குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுக்கடைகள் அடைக்கப்பட வேண்டும்... - 300க்கும் மேற்பட்டோர் சாலை போராட்டம்...

புதுச்சேரி | காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட சாமிபிள்ளைதோட்டம் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடத்தில் புதிய மதுபான கடை அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை அமைத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும், கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகள் அதிகரிக்கும் என்பதால், புதிய மதுபான கடைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி சாமிப்பிள்ளைதோட்டம் பகுதி மக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | காவிரி நீர் பங்கீடு...! கோரிக்கை விடுத்த விவசாய சங்கங்கங்களின் கூட்டமைப்பு ...!

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் மற்றும் பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட பெண்கள் புதியதாக திறக்கப்பட உள்ள மதுபானக்கடையை முற்றுகையிட்டனர், மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர் பின்னர் போலீசார் சமாதனப்படுத்தி கலைய செய்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | தொடர்ந்து 6 மணி நேரம் ஸ்லோகம்... புது வகையான சாதனை படைத்த ஸ்ரீகிருஷ்ணா குடும்பம்...

இதனிடையே கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி பொருப்பேற்று ஒன்றறை ஆண்டுகளில் புதிதாக 350 மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் புதுச்சேரியில் சாராய ஆறு ஓடுகிறது என தெரிவித்தார், இன்னும் 6 மதுபான ஆலைகளுக்கு அரசு அனுமதி அளுக்க உள்ளதாக தெரிவித்த அவர், அப்படி அனுமதி அளித்தால் புதுச்சேரியில் சாராய கடல் ஓடும் எனவும் வேதனை தெரிவித்தார்.

மேலும் படிக்க | விளையாட்டுகளால் தான் மாணவர்களின் ஒழுக்கம் உயரும் - அமைச்சர் அன்பில்மகேஷ்...

புதுச்சேரியில் பள்ளிகள், கோவில்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அரிகே உள்ள மதுபான கடைகளை அரசு மூட வேண்டும் என வலியுறுத்திய அவர், முதலமைச்சர் முதல் அனைத்து தரப்பு அதிகாரிகளும் லஞ்சம் பெற்று கொண்டு மதுபான கடைகளுக்கு அனுமதி அளிக்கின்றதாக குற்றம்சாட்டினார், மேலும் நீதிமன்றம் சென்றாவது இங்கு மதுக்கடை திறப்பதை தடுத்து நிறுத்துவோம்  எனவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி...! மோட்டார் இயங்காததால் ஏற்பட்ட சோகம்...!