ஜஸ்ட் மிஸ்... இல்லன்னா இந்நேரம் இன்னொரு தீரன் அதிகாரம் உருவாக்க நேர்ந்திருக்கும்...

நித்திரவிளை அருகே வீடுகளில் ரகசிய கோடு போட்ட வடமாநில பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜஸ்ட் மிஸ்... இல்லன்னா இந்நேரம் இன்னொரு தீரன் அதிகாரம் உருவாக்க நேர்ந்திருக்கும்...

கன்னியாகுமரி | தீரன் அதிகார் ஒன்று படத்தை பலரும் பார்த்திருப்போம்! அதில், ஒரு வட இந்திய குழு, தென்னிந்தியாவிற்கு வந்து கொள்ளையடித்து சென்றது நாம் அனைவரும் அறிந்த நிலையில், அதற்கு எப்படி யார் உதவினார்கள் என்ற க்தையை மிகவும் சிறிய நேரத்தில் தெளிவுப்படுத்தி இருப்பர். கம்பளி விற்கும் ஒரு ஜோடி, வீடுகளை கவனித்து அந்த வீடுகளில் கொள்ளை செய்ய எந்த வீடு சரியானது என்பதை ஒரு சிறிய குறியீடு போட்டு வந்தது அந்த கதையில் ஒரு சிறிய சீனில் பார்த்து பயந்திருப்போம்.

ஆனால், அந்த சிறிய சீன் வெறும் கற்பனை கதை இல்லை. ஏன் என்றால் அது உண்மை தான். பல இடங்களில், வீட்டு வாசல்களில் குறியீடுகள் போட்டு, அந்த வீடுகளில் பெரும் கொள்ளை போன்ற மோசமான சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது இது போன்ற மோசமான சம்பவம் நடப்பதற்கு முன்பே தடுக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | போதை விழிப்புணர்வு..சித்திரகுப்தன் வேடமணிந்து சவப்பெட்டியுடன் வலம் வந்த இளைஞர்கள்...

நித்திரவிளை அருகே நம்பாளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் நேற்று மதிய வேளையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில பெண் ஒருவர் யாசகம் கேட்டு சென்றுள்ளார். அவர் செல்லும் ஒரு சில வீடுகளின் முன்பக்கம் உள்ள இரும்பு கேட்டுகளில் ரகசிய கோடுகளை இட்டு சென்றுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அந்த பெண்ணை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் இந்தி மொழியில் பேசியதால் புரிந்து கொள்ள முடியாத பொதுமக்கள் நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க | ஒரே தெருவில் ராணுவ வீரர் மற்றும் காவலர் வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு...

இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணை அழைத்து கொண்டு நித்திரவிளை காவல்நிலையம் வந்து நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின் கையில் இருந்த பையில் கறுப்பு மை போன்றவை இருந்துள்ளது. மேலும் அந்த பெண் பெங்களூரை சேர்ந்தவர் என்றும், குழித்துறை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து ஒவ்வொரு வீடுகளாக சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து போலீசார் அந்த பெண்மணியின் கைரேகை பதிவுகளை வாங்கி வைத்துக்கொண்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். கடந்த ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவுகள் ஜன்னல்களில் இதே போன்று குறியீடுகள் இட்டு சென்று அந்த வீடுகளில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்தேறியதால் தான் மக்கள் அச்சமடைந்து முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு அந்த பெண்ணை போலீஸில் பிடித்து கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மணல் திருட்டில் ஈடுபடும் கோவில் நிர்வாகம்...கைக்கோர்க்கும் காவல் அதிகாரிகள்...