மணல் திருட்டில் ஈடுபடும் கோவில் நிர்வாகம்...கைக்கோர்க்கும் காவல் அதிகாரிகள்...

மணல் திருட்டில் ஈடுபடும் கோவில் நிர்வாகம்...கைக்கோர்க்கும் காவல் அதிகாரிகள்...

மனம்பூண்டியில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் வடியவில்லை மணல் கொள்ளை படு ஜோராக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி கோயில் நிர்வாகமே மணல் கொல்லையில் ஈடுபட்டு வருவதால் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் சரகம் மனம்பூண்டியில் தென்பண்ணையாற்றில் அதிக அளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. உயிரை பணயம் வைத்து உயிரே போனாலும் பரவாயில்லை ஆனால் எங்களுக்கு மணல் தான் முக்கியம் என்று மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் ரகோத்தமர் கோயில் நிர்வாகத்தால் சமூக ஆர்வலர்கள், விவசாய பெருங்குடி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு பெரிய கோயில் நிர்வாகமே இதுபோன்ற மணல் கொள்ளையில் அனுமதியின்றி ஈடுபட்டு வருவதால் சாதாரண பொதுமக்கள் மணல் கொள்ளையர்கள் கேள்வியை கேட்காத அளவிற்கு இச்சம்பவம் நடைபெற்று வருகிறது.மனம்பூண்டியில் ரகோத்தமர் கோயில் நிர்வாகம் பட்ட பகலில் கோவிலுக்கு பின்புறம் உள்ள வாசல் வழியாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் தெரிந்து கொள்ள | மாற்றுத் திறனாளிகளுக்கு மெரினாவில் நிரந்தர நடைபாதை - சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி

தென்பெண்ணை ஆற்றில் வெள்ள நீர் அதிகளவு செல்கிறது, மனம்பூண்டி பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக செயல்பட்டு வரும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள இடத்தின் அருகில் நடுக்கரையில் ஆட்களை வைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் கோயில் நிர்வாகத்தால் பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயி பெருங்குடி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தண்ணீர் வடிந்து வறண்டு காணப்பட்டாலும் இடுப்பிற்கு மேல் வெள்ளநீர் சென்று கொண்டு இருக்கிற  நிலையில்,உயிரை பணயம் வைத்து மணல் திருட்டில் ஈடுபடுவதற்கு என்ன காரணம் அப்படி என்ன அவசரம் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள | இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டன் உயிரிழப்பு...

அரகண்டநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் மணல் திருட்டு நடைபெற்று வருவதாகவும் அதற்கு ஒரு சில காவல்துறை அதிகாரிகள் உடந்தையாக  இருப்பதாகவும் தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மணல் கொள்ளையில்  ஈடுபடும்  கும்பலை கைது வேண்டும் எனவும் தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.