கல்யாணி யானை உடல்நிலை பரிசோதனை...! எடை குறைக்க அறிவுறுத்தல்..!

கல்யாணி யானை உடல்நிலை பரிசோதனை...! எடை குறைக்க அறிவுறுத்தல்..!

தமிழ்நாடு கால்நடை மற்றும் வனத்துறை சார்பில் கோவை பேரூர் கோவில் கல்யாணி யானைக்கு உடல் எடை மற்றும் இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. 

தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள வளர்ப்பு யானைகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனையும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை யானையின் உடல் எடை சோதனையும் கால்நடை துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட வருகின்றனர். அதன் அடிப்படையில் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு கடந்த 1996 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கல்யாணி யானை, கோவில் அருகே உள்ள இடத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கல்யாணி யானைக்கு 31 வயது ஆகியுள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக யானையின் ரத்த பரிசோதனை மற்றும் உடல் எடை,  அதன் மொத்த நீளம், அகலம், காலின் அளவு மற்றும் வாலின் அளவு ஆகியவை சோதனை செய்யப்பட்டு சேகரிக்கப்பட்டது. 

இதில் கல்யாணி யானையின் மொத்த எடை 4230 கிலோவாக உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சோதனை செய்தபோது 4285 கிலோவாக இருந்த நிலையில் தற்போது 55 கிலோ எடை குறைந்துள்ளது. மேலும் கல்யாணி யானையின் எடையை 4000 கிலோ வரை மட்டுமே வைத்து பராமரிக்குமாறு கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் உடல் எடையை குறைக்கும் வகையிலான உணவுகளும் வழங்கப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது யானை, பாகனிடம் எவ்வாறு நடந்து கொள்கிறது. அவர்களது ஆணைகளுக்கு கட்டுப்படுகிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டது.

இதையும் படிக்க : அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு...!!!