மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கால நிலைக்கு ஏற்ப பல்வேறு வகையிலான மலர்கள் பூத்து குலுங்கும். கொடைக்கானல் மலை சாலைகளிலும் பெரும்பாலான இடங்களில் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமையும்.
இந்த நிலையில் கோடை காலங்களில் மட்டுமே பூக்கக்கூடிய ஜக்கரண்டா மலர்கள் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளன. ஜக்கரண்டா மிமோசி போலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லாவண்டர் நீல நிற பூக்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் பூத்துள்ளன. குறிப்பாக பெருமாள்மலை, சாலையில் அதிக அளவில் பூத்துள்ளது.
இந்த ஜக்கரண்டா மலர்கள் மரங்களில் மட்டுமே பூக்கக்கூடிய வகையைச் சேர்ந்தது. கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக இந்த மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தும் வருகின்றனர்.
மேலும் படிக்க | பனியால் கருகும் ரோஜா மலர்கள்... ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்...