கேள்வி கேட்ட பஸ் டிரைவரை தாக்கிய போதை ஆசாமி…

ரோட்டில் மது அருந்தி கொண்டிருந்த நபர்களை தட்டி கேட்ட தனியார் பேருந்து ஓட்டுநரின் மண்டையை உடைத்து, பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேள்வி கேட்ட பஸ் டிரைவரை தாக்கிய போதை ஆசாமி…

கோவை | காரமடை பகுதியில் தனியார் பேருந்து ஒன்றின் ஓட்டுநராக தினமும் மேட்டுப்பாளையம் முதல் காரமடை வரை செல்லும் தனியார் கிராம புற பேருந்தின் ஓட்டுநராக இருந்து வருகிறார் மனோஜ். வழக்கம் போல பேருந்தினை பயனிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை செல்ல சாலையூர் கிராமம் வழியாக வந்துள்ளார்.

அப்போது சாலையூர் பகுதிக்கு வந்த போது சாலையின் நடுவே பேருந்து செல்ல முடியாத அளவுக்கு இருசக்கர வாகனத்தை நிறுத்து விட்டு இளைஞர்கள் சிலர் மது அருந்தி கொண்டு இருந்துள்ளனர்.

மேலும் படிக்க | போரால் உருக்குலைந்த உக்ரைன்…ஓராண்டை கடந்தும் நீளும் போரால் கண்ணீரில் மக்கள்...!

இருசக்கர வாகனங்கள் சாலை நின்றதால் மேற்கொண்டு பேருந்து முன்னேரி செல்ல முடியாததால் இளைஞர்களை பேருந்து ஓட்டுநர் வாகனத்தை எடுக்க கூறியுள்ளார். அப்போது ஓட்டுநரை அங்கிருந்த இளைஞர்கள் சாமாரியாக தாக்கியுள்ளனர் இதில் ஓட்டுநரின் மண்டை உடைந்தது மேலும் தனியார் பேருந்தின் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

இதனையடுத்து ஓட்டுநர் மனோஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து மனோஜ் காரமடை போலீசில் புகார் செய்தார். தற்போது அது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | ஐஸ்கிரீம் கம்பெனியை இடித்த நபர் மீது புகார்...