சிவகங்கை | காரைக்குடி அருகே ஆத்தங்குடி வெள்ளூர் புதுக் கண்மாய் , ஆசிறுவயல் கற்களக் கண்மாய் , குருந்தம்பட்டு பாப்பன் கண்மாய் என மூன்று கிராமத்தில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது.
இந்த ஆண்டும் நல்ல மழை பொழிவு இருந்ததால் கண்மாய்கள் நிரம்பியது. தொடர்ந்து விவசாயத்திற்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதால் நீர் வற்றியதை தொடர்ந்து 3 கிராமமக்கள் மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர்.
இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆத்தங்குடி ,வெள்ளுர் , கோனாபட்டு, இரணியூர்கீழசெவல்பட்டி, குருந்தம்பட்டு, ஆலம்பட்டு , மேலமாகானம், ஒ.சிறுவயல், குன்றக்குடி, நேமம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வருகை தந்தனர்.
மீன் பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் சிறுவர்கள், பெரியவர்கள் , பெண்கள் என ஏராளமானோர் போட்டி போட்டுக்கொண்டு ஊத்தா கூடை ,கச்சாவலை உள்ளிட்ட உபகரங்களை கொண்டு ஒற்றுமையாக கன்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
இதில் கட்லா, ஜிலேபி, கெளுத்தி கொண்டை போன்ற மீன்கள் கிடைத்தது. கிடைத்த மீன்களை மகிழ்ச்சியுடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.