எதிர்பார்த்ததை விட அதிக மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி...

வேதாரண்யம் அருகே கடல்கொய் மீன்கள் அதிக அளவு கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எதிர்பார்த்ததை விட அதிக மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி...

நாகை | வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் காலம் ஆகும். கோடியக்கடை கடற்கரையில் பல்வேறு ஊர்களில் இருந்து மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கடலுக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் கரை திரும்பினர். அவர்களது வலையில்  அதிக அளவில் கடல்கொய் மீன், திருக்கை மீன், சிங்கி இரால், நண்டு உள்ளிட்ட மீன்கள் அதிகளவு கிடைத்துள்ளது.

மேலும் படிக்க | அரளிப்பாறை மஞ்சுவிரட்டு அதிரடியாக ரெடியாகும் முன்னேற்பாடு

கடல்கொய் மீன் சுமார் 20 டன் வரத்து அதிகரிப்பால்  விலை குறைவாக ஒரு கிலோ 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை ஏலம் போனது. கண்ணாமுழி திருக்கை, புள்ளி திருக்கை உள்ளிட்ட அதிக எடை கொண்ட திருக்கை மீன்கள் அதிகளவு கிடைத்துள்ளது.

இந்த மீன்களை வெளிமாநில வியாபாரிகள் ஏலம் எடுத்து வாங்கி சென்றனர். மீன்விலை வீழ்ச்சி அடைந்தாலும் மீன்கள் அதிக அளவு கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் படிக்க | திருக்குறள் புத்தகத்தில் திருமண அழைப்பிதழ்... அர்த்தமுள்ள ரிட்டன் கிஃப்ட்...!