கரும்பு கொள்முதல் செய்வதில் பாரபட்சம் - விவசாயிகள் போராட்டம்...

பொங்கல் கரும்பு கொள்முதல் செய்வதில் பாரபட்சத்தை கண்டித்து விவசாயிகள் கையில் கரும்புடன் சாலை மறியல் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரும்பு கொள்முதல் செய்வதில்  பாரபட்சம் - விவசாயிகள் போராட்டம்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கலுக்கு பயன்படும் செங்கரும்பு மயிலாடுதுறை அடுத்த வானதிராஜபுரம், கடலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது.

தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு வழங்கப்படாது என்ற அறிவித்த போது வானதிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கரும்பில் கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம், ஆற்றில் கரும்பை கொட்டி ஆர்ப்பாட்டம் இன்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | பாரம்பரிய உடையில் சமத்துவ பொங்கல்...கோலகலமாக கொண்டாடிய மாணவ, மாணவிகள்!

இந்நிலையில் கரும்பை தமிழக அரசு கொள்முதல் செய்யும் என்றும் இதற்காக குழு அமைத்து இடைத்தரகர்கள் இல்லாமல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒவ்வொரு கிராமத்திலும் 20% கரும்பை தமிழக அரசு கொள்முதல் செய்யும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் வானதி ராஜபுரம் கிராமத்தில் பொங்கல் கரும்பு ஆய்வு செய்த கொள்முதல் குழுவினர் ஐயாயிரம் கரும்பு மட்டுமே வானதிராஜபுரத்தில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்தது.

மேலும் படிக்க | இனி 5 அடி கரும்புகளையும் கொள்முதல்...அமைச்சர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!

இந்த கிராமத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் கரும்புகள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அதிகாரிகளின் குழுவினர் ஐந்தாயிரம் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்ததால் கவலை அடைந்த விவசாயிகள் இன்று மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் மல்லியம் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை டிஎஸ்பி மற்றும் குத்தாலம் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கரும்பு கொள்முதல் செய்யும் குழு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பேச்சு நடத்த உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து கையில் கரும்புகளுடன் விவசாயிகள் சம்பவ இடத்திலேயே காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | 6 அடிக்கும் குறைவான கரும்புகளையும்...அரசு ஆணையிட வேண்டும்...ராமதாஸ் வலியுறுத்தல்!