ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... ஐம்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த மாணவர்கள்...

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... ஐம்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த மாணவர்கள்...

திண்டுக்கல் | பழனி சாலையில் அரசு உதவி பெறும் ஐ டி ஓ மேல்நிலைப்பள்ளி கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இந்த 1974 ஆம் ஆண்டு முதல் முதல் 1976 ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவர்களின் சந்திக்கும்  விழா நடைபெற்றது.

இதில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற முன்னாள் மாணவர்கள் 300 க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர். தங்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்பித்தனர்.

மேலும் படிக்க | வடிகால் வாய்க்காலுக்காக தோண்டப்பட்ட பள்ளம்...! புகார் மனு அளித்த வர்த்தக சங்கத்தினர்...!

இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்,  பொறியாளர், அரசு பணியில் உயர் பதவியில்  இருந்து ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் தங்கள் மனைவி பேரக் குழந்தைகளுடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்களிடம்  முன்னாள் மாணவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்று மரியாதை செலுத்தினர் இந்த சம்பவத்தால் நெகிச்சியை ஏற்படுத்து.

மேலும் படிக்க | மீண்டும் பள்ளிக்கு போகலாம்... நம்மை நாம் அங்கே தேடலாம்...