முதலை வாயில் சிக்கி உயிரிழந்த இளைஞர்... கவலையில் உறவினர்...

வேலக்குடி பகுதியில் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்த 18 வயது இளஞ்சரை முதலை இழுத்து சென்றதால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முதலை வாயில் சிக்கி உயிரிழந்த இளைஞர்... கவலையில் உறவினர்...
Published on
Updated on
1 min read

கடலூர் | சிதம்பரம் அருகே வடக்கு வேலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரி அவரது மகன் திருமலை வயது 18 இவர் அவரது நண்பர்களான விஷ்ணு, பழனிவேல் உடன் மூன்று பேரும் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு முதலை திருமலையை ஆற்றுக்குள் இழுத்து சென்றது.

இதனால் அவருடன் குளிக்க சென்ற இரண்டு நண்பர்களும் அலறடித்துக் கொண்டு கரைக்கு திரும்பினர், இது குறித்து சிதம்பரம் தீயணைப்பு துணைவருக்கு  தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள், சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, திருமலையின் உடலை தேடும் பணிகளை தீயணைப்புத் துறையினர் மீனவர்கள் உதவியுடன் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடும் பணிகளை முடக்கி விட்டுள்ளனர் 18 வயது இளைஞர் குளிக்க சென்ற போது முதலை இழுத்துச் சென்றது அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பழைய கொள்ளிடம் ஆற்றில் உள்ள முதலைகளை பிடித்து தனியாக முதலை பண்ணை அமைத்து அங்கு சென்று விட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை இழந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com