கூட்டம் கூட்டமாய் தரிசனம்... களைகட்டிய கபாலீஸ்வரர் கோவில்...

கூட்டம் கூட்டமாய் தரிசனம்... களைகட்டிய கபாலீஸ்வரர் கோவில்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் பொது மக்கள் தரிசனம் செய்தனர்.
Published on

சென்னை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளாக கொரொனா பாதிப்புக்கு மத்தியில் பல்வேறு கட்டுபாடுகளுடன் பண்டிகைகள் கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் தற்போது கொரொனா பாதிப்பு குறைந்த உள்ளதால் தமிழக அரசு அனைத்து கட்டுபாடுகளையும் தளர்த்தி உள்ளது. 

இந்த நிலையில் நேற்று இரவில் இருந்தே தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகிறனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.

மேலும், கோவையில் கார் கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வடபழனி ஆண்டவர் கோயில்,  பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட முக்கியமான வழிபாட்டு தலங்களில் சட்டம் ஒழுங்கு போலீசாருடன் சென்னை பாதுகாப்பு பிரிவு போலீசாரும் இணைந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com