சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து...

சீர்காழி அருகே சாலையோர வாய்க்காலில் கார் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியது பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து...
Published on
Updated on
1 min read

மயிலாடுதுறை | சீர்காழி அருகே பல்லாவனம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன்.இவர் தனது காரில் திருமுல்லைவாசல் பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது திருமுல்லைவாசல் பகுதியில் இருந்து சீர்காழி சாலையில் சென்று கொண்டிருந்தார். எடமணல் அருகே வளைவில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி கொடுப்பதற்காக திருப்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

வாய்க்காலில் முழு அளவு தண்ணீர் செல்வதால் கார் முற்றிலும் மூழ்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியே  சாலையில் சென்றவர்கள் துரிதமாக செயல்பட்டு காரின் உள்ளே இருந்த ரவீந்திரனை மீட்டு காப்பாற்றினர்.

இது குறித்து சீர்காழி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் செல்லும் வாய்க்காலில் கவிழ்ந்து கார் விபத்துக்குள்ளான நிலையில் ஓட்டுநர் அதிஷ்டவவசமாக உயர்தப்பிய நிகழ்வு அப்பகுதியில் பரப்பை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com