பேருந்து கவிழ்ந்து விபத்து - 27 பேர் படுகாயம்...

வந்தவாசி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பேருந்து கவிழ்ந்து விபத்து - 27 பேர் படுகாயம்...

திருவண்ணாமலை | வந்தவாசி அடுத்த திரை கோவில் கிராமத்தில்  சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து சாலை ஓரத்தில் விவசாய நிலத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் படுகாயம் அடைந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி தேசூர் வழியாக செஞ்சிக்கு நாராயணமூர்த்தி என்ற தனியார் பேருந்து ஒன்று 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் பேருந்தை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வந்தவாசி அடுத்த திரைக்கோவில் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பார்ப்பு விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலை ஓரத்தில் விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 27க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் படிக்க | அசாம் மாநிலத்தின் தொடர்ச்சியான தீ விபத்துகள்!!!

இதை எடுத்து தகவல் அறிந்து தேசூர் காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவம் இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விபத்து எப்படி நடைபெற்றது என்று விசாரணை செய்து வருகின்றனர்

வந்தவாசி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து சாலை ஓரத்தில் விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

மேலும் படிக்க | ”அவள் 35 துண்டுகள் நீ 70 துண்டுகள்” தொடரும் கொலை மிரட்டல்கள்!!!